கரூரில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு, சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: கரூரில் 41 பேர் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு, சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டை அதிகரிக்கக் கோரிய வழக்கில் தொடர்புடையவர்கள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.