கரூர் துயர சம்பவத்தில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
சென்னை: அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணை தொடங்கியது. அப்போது "காவல்துறை கண்மூடிக் கொண்டு இருக்க முடியாது. வழக்குப்பதிய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிய வேண்டும். 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?, பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள்? நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களே?" என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.