கோவில்பட்டி: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி, கோவில்பட்டியில் நேற்றுஅளித்த பேட்டி: கரூர் வேலாயுதபுரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தில் யாரையும் குற்றம்சாட்ட நான் தயாராக இல்லை. அதே வேளையில் தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. சிபிஐ விசாரணை வைத்தாலும் பிரச்னை இல்லை. இத்தனை பேர் விசாரிக்கும் போது கண்டிப்பாக உண்மை வெளிவரப்போகிறது. அது தெரிவதற்கு முன்பே ஏராளமான வதந்திகள் சமூக வலைதளங்கள் மூலமாக திட்டமிட்டு பரப்பப்படுகின்றன’’ என்றார்.
+
Advertisement