பீஜிங்: தமிழ்நாட்டின் கரூரில் நடிகர் விஜய்யின் அரசியல் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கியதில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் நேற்று கூறுகையில்,கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்தியாவில் உள்ள சீன தூதரகம் தனது அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்து கொள்கிறது என்று தெரிவித்தார்.
+
Advertisement