கரூர் துயரம்: ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
கரூர்: உயிரிழந்த 39 பேரில் ஒரு பெண்ணின் அடையாளம் மட்டும் தெரியவில்லை. அவரின் முகவரியைக் கண்டறியும் பணி நடக்கிறது. 14 உடல்கள் உடற்கூராய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 111 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மற்றவர்கள் நலமுடன் இருக்கின்றனர் என கரூரில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.