கரூர் துயரம்.. தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று: கனிமொழி எம்.பி. பேட்டி!!
சென்னை: தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; கரூரில் இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்த துயர சம்பவத்தில் இளைஞர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சூழ்நிலையை சாந்தப்படுத்துவதுதான் அரசியல் கட்சியின் கடமை. கரூர் சம்பவத்தில் யாரையும் பழியோ, குற்றமோ சொல்ல வேண்டிய நேரமல்ல. சமூக வலைத்தளங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களோடு திமுகவும், அரசும் உடன் நின்றது. கரூர் துயரத்துக்கு யார் காரணம் என்பது விசாரணையில் வெளிவரும். தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது இதுவரை பார்த்திராத ஒன்று. தவெக தலைவர், நிர்வாகிகள் ஆறுதல் கூற வராதது மனிதாபிமானம் இல்லை என்பதை காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்காமல் தனது பாதுகாப்பு மட்டும் முக்கியம் என்பது நான் இதுவரை அறிந்திராத ஒன்று.
அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக இன்னும் பிரச்சினையை தூண்டுவதுபோல் பேசுகின்றனர். வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது உச்சகட்ட பொறுப்பின்மை; தவிர்க்கப்பட வேண்டியது. புரட்சி வெடிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டது உச்சகட்ட பொறுப்பின்மை. கரூரில் அனைத்து கட்சிகளின் சார்பில் தலைவர்கள், தொண்டர்கள் மக்களுக்கு உதவி செய்தனர். சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டர்கள் கூட அங்கு இல்லாதது மனிதாபிமானம் இல்லாததுபோல் தெரிகிறது என அவர் தெரிவித்தார்.