கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்!
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான வழக்குகளில் மட்டும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவு உள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஒரு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது. விசாரணையில் பெரும் குறைபாடுகள் இருந்தாலே ஒழிய சிபிஐக்கு மாற்ற உத்தரவிட முடியாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.