கரூரில் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான விவகாரம் : தவெக மனுவை அவசர வழக்காக இன்று ஏற்க மறுப்பு!!
மதுரை : கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக மனுவை அவசர வழக்காக இன்று ஏற்க நீதிமன்ற பதிவாளர் மறுத்துவிட்டார். தவெக சார்பில் அளிக்கப்படும் மனு நாளை ஏற்கப்பட்டு, வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அனுமதி கோரியும் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.