டெல்லி: கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் வெள்ளியன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரிக்க வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை கோரி பாஜகவைச் சேர்ந்த உமா ஆனந்தன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
+
Advertisement