கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்; காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000: பிரதமர் மோடி அறிவிப்பு
கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், அந்த வரிசையில் 3-வது கட்ட பிரச்சாரம் நேற்று கரூரில் நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
அவர்களது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறினார். இறந்தவர்களின் குடும்பதினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது. தொடர்ந்து த.வெ.க. சார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவுள்ளதாக விஜய் அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.