கரூர்: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வந்தது. கடந்த 5ம் தேதி முதல் எஸ்.ஐ.டி விசாரித்து வந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எஸ்.ஐ.டி. விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்கள், ஆவணங்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement