Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதி: யார் இந்த அஜய் ரஸ்தோகி?

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பத்தை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுபடி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த த.வெ.க. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த அஜய் ரஸ்தோகி யார் என்பது குறித்த கேள்வி அதிகமாகியுள்ளது. முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ம் தேதி பிறந்த இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ்பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்த அவரது தந்தை ஹரிஷ் சந்திர ரஸ்தோகியின் வழியில், 1982ம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். இவர் 1990ம் ஆண்டு, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், 2004ம் ஆண்டு வரை அப்பதவியில் நீடித்தார்.

மேலும், 2004 முதல் 2018 வரை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றி உள்ளார். நீதிபதி அஜய் ரஸ்தோகி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாக 2018 முதல் 2023 வரை பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தில் தனது பதவிக் காலத்தில், ரஸ்தோகி 506 அமர்வில் பங்கேற்று விசாரித்துள்ளார். நீதிபதியாக பல முக்கிய தீர்ப்புகளை வழங்கி உள்ளார். மேலும், இவர் மேலும் தனது பதவிக்காலத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாகவும், திருமணத்தை மீறிய உறவுகளை குற்ற மற்றதாக்குதல், கருணைக் கொலை உரிமைக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியவர். அதேபோல், பெண் நேவி ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐஏஎஸ் தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம் என்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர்.