Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் பகுதியில் ஏக்கருக்கு 600 முதல் 700 கிலோ வரை மகசூல்

*சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கரூர் : ஒரு ஏக்கர் நிலத்தில் 10 மூட்டை சூரியகாந்தி கிடைப்பதால் விவசாயிகள் சாகுபடி செய்வதில் ஆர்வம் செலுத்துகின்றனர்.சூரியகாந்தி அனைத்துக் காலத்திற்கும் ஏற்ற பயிராகும். சூரியகாந்தி சாகுபடிக்கு, நீர்ப்பாசன வசதியுடன் கூடிய வடிகால் வசதியுள்ள எந்த மண் வகையும் உகந்தது.

இது ஆடிப்பட்டம், கார்த்திகைப் பட்டம், மார்கழிப்பட்டம் மற்றும் சித்திரைப் பட்டம் என ஆண்டு முழுவதும் பயிரிடலாம். நிலம் தயாரித்தல், விதை நேர்த்தி செய்தல், சரியான உர நிர்வாகம், களை மற்றும் நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, மற்றும் அறுவடை ஆகியவற்றை முறையே கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மண் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் மண் மிகவும் உகந்தது. பருவம் தவறிய மழை மற்றும் வறட்சியைக் கருத்தில்கொண்டு, குறைந்த மழையளவு உள்ள இடங்களில் நெற்பயிருக்கு பதிலாக இதை பயிரிடலாம்.

பருவங்கள் மற்றும் விதைகள். ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகைப்பட்டம் ஆகியவற்றில் மானாவாரியாக சாகுபடி செய்யலாம்.மானாவாரி மற்றும் இறவை பயிராகவும் இதை பயிரிடலாம். விதைப்பதற்கு முன் விதைகளை நேர்த்தி செய்வது மிகவு முக்கியம்.

சரியான உர மேலாண்மையைப் பின்பற்றுவது மகசூலை அதிகரிக்க உதவும். களைகள் மற்றும் நீர்ப் பாசனத்தை சரியாக நிர்வகிப்பது மிகவும் முக்கியம். பூக்கும் நேரத்தில் அதிக ஈரப்பதம் மற்றும் கனமழை இருந்தால் பூக்கும் வளர்ச்சி பாதிக்கப்படும்.

எனவே இதை தவிர்ப்பது நல்லது. பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை சரியான முறையில் கையாள வேண்டும். சரியான தொழில்நுட்பத்தைப் பின்பற்றி மகசூலை அதிகரித்து, அதிக வருமானம் பெறலாம். இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்து, மதிப்பு கூட்டி விற்பனை செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் 600 முதல் 700 கிலோ வரை மகசூல் ஈட்ட முடியும். இந்த மகசூலைக் கொண்டு விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இருப்பினும் சூரியகாந்தியை அளவில் பறவைகள் உணவாக பயன்படுத்தலாம்.

தகுந்த பாதுகாப்பு அவசியம். குறிப்பாக கிளி, மயில், மைனா, குருவிகள், பறவைகள் விரும்பி உண்ணுகின்றன. தற்போது சட்டப்படி விலங்குகளையும் பறவைகளையும் துன்ப துன்பப்படுத்தக்கூடாது என்பதால் கடும் போராட்டத்துக்கு மத்தியில் விவசாயிகள் சூரியகாந்தி பயிர் செய்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி, நெரூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், ஏமூர், வெள்ளியணை, ஜெகதாபி, தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மூலமாகவும் மூலமாகவும் சாகுபடி செய்கின்றனர்.சூரியகாந்தி 110 நாள் முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும் என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஓரளவு தண்ணீர் குறைவான பகுதியிலும் சாகுபடி செய்ய முடியும். மேலும் தற்போது சூரியகாந்தி என்னைக்கு அதிக வரவேற்பு இருப்பதால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.