சென்னை: பக்ரைனில் நடந்த கபடி போட்டியில் இந்திய அணியின் சார்பில் பங்கேற்று தங்கம் வென்ற சென்னை கண்ணகி நகரைச் சார்ந்த கார்த்திகா, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கண்ணகி நகர் என்றாலே குறைத்து மதிப்பிடும் பார்வை இருந்ததை கார்த்திகா மாற்றியுள்ளார். தமிழ்நாடு அரசு கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியிருப்பதை வரவேற்கிறோம். எனினும், இதை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்றார்.
+
Advertisement
