சென்னை: கார்த்திகை தீப விழாவையொட்டி பயணிகள் வசதிக்காக திருவண்ணாமலைக்கு டிச.2, 3ல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை, கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.3, 4ல் 160 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement



