பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சென்னையைச் சேர்ந்த வஹிதா பானு (50) என்ற பெண், அவரது கணவர் மற்றும் மகனுடன் சுற்றுலா துறை வாகனத்தில் சபாரி சென்றார். பன்னரகட்டாவில் வனவிலங்குகள் தாக்காத வகையில் கம்பியால் அடைக்கப்பட்ட ஜன்னல் கொண்ட வாகனங்கள் தான் பார்வையாளர்களின் சபாரிக்காக பயன்படுத்தப்படுகிறது.
அந்த வாகனத்தில் சபாரி சென்ற வஹிதா பானு, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றபோது, ஒரு சிறுத்தை திடீரென அவரை நோக்கி பாய்ந்து தாக்க முயன்றது. ஜன்னல் கம்பி வலையால் அடைக்கப்பட்டிருந்ததால், சிறுத்தையின் தாக்குதலிலிருந்து அவர் தப்பினார். எனினும் சிறுத்தையின் பாதம் மட்டும் உள்ளே சென்றதால், வஹிதா பானு லேசான காயமடைந்தார். உடனடியாக அவர் ஜிகனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
