பெங்களூரு: கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் ஆலந்து சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தகுதியான 6000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக விசாரிக்க, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.கே.சிங் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு ஆலந்து தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுபாஷ் குத்தேதர், அவரது மகன்களான ஹர்ஷானந்த் குட்டேதர் மற்றும் சந்தோஷ் குத்தேதர் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியது.
வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைத் தேடி இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுபாஷ் குத்தேதரின் வீட்டருகே உள்ள இடத்தில் எரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆவணம் தீயில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.ஐ.டி, விசாரணையை தீவிரப் படுத்தியிருக்கிறது.