பெங்களூரு: ஷிவமொக்காவிலிருந்து மைசூருவிற்கு சென்ற ரயிலின் 6 பெட்டிகள் தனியாக பிரிந்தபோதிலும், பெரிய விபத்து எதுவும் ஏற்படாததால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஷிவமொக்கா - மைசூரு ரயில் (16205), ஷிவமொக்காவிலிருந்து தினமும் மாலை 4.50 மணிக்கு கிளம்பி இரவு 10.30 மணிக்கு மைசூரு சென்றடையும். நேற்று மாலை வழக்கம்போல ஷிவமொக்காவிலிருந்து கிளம்பிய ரயில் (16205), ஷிவமொக்காவில் உள்ள ஹோல் பேருந்து நிலையம் அருகே உள்ள துங்கா பாலத்தை நெருங்கியபோது, திடீரென ரயிலிலிருந்து 6 பெட்டிகள் மட்டும் தனியாக பிரிந்தன. மீதமுள்ள பெட்டிகள் நகர்ந்து சென்று சிறிது தூரத்தில் அவையும் நின்றன. ரயிலிலிருந்து 6 பெட்டிகள் தனியாக பிரிந்தாலும், பெரிய விபத்தாக ஏற்படவில்லை. அதனால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. ஓடும் ரயிலில் இருந்து பெட்டிகள் பிரிந்தாலும், எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள், பிரச்னை என்னவென்பதை ஆய்வு செய்து சரி செய்தனர்.
+
Advertisement