Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கர்நாடக குழப்பம்

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவர் 2023ம் ஆண்டு பதவியேற்கும் போதே இரண்டரை ஆண்டுகள் கழித்து துணைமுதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவம்பர் 20ம் தேதி ஆட்சி அமைந்து இரண்டரைஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதல்வர் மாற்றம் குறித்து கட்சிக்குள் பரவலாக வதந்திகள் எழுந்து வருகிறது.

முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் டெல்லி சென்று மேலிட தலைவர்களை கட்சிப்பணிக்காகவோ, அரசு திட்டங்கள் குறித்ேதா சந்திக்க சென்றால் கூட, எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் மத்தியில் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் நடக்க இருக்கிறது. முதல்வர் மாற்றம் நடைபெற இருக்கிறது என்று சர்ச்சை எழுகிறது. இது கட்சிக்குள் சிலர் ஏற்படுத்தும் குழப்பமே தவிர எந்த மாற்றமும் ஏற்படாது. சித்தராமையா 5 ஆ்ண்டு முதல்வராக நீடிப்பார் என்று துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரே பதிலளித்துவிட்டார்.

அதே போன்று மேலிட தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பிரதமரை சந்தித்து மாநில நலனுக்கான திட்டங்களுக்கு நிதி விடுவிப்பது, நீர்ப்பாசன திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து வலியுறுத்தினேன். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மேலிட தலைவர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் செய்ய சொல்லி மேலிடமும் சொல்லவில்லை என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். கர்நாடக அமைச்சரவையில் சித்தராமையாவுடன் சேர்த்து 34 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் அமைச்சர் நாகேந்திரா, கே.என்.ராஜண்ணா இருவர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த இரு இடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். இந்த இரு இடங்களுக்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் போட்டி போடுகின்றனர். நான் மூன்று முறை தோற்காமல் ஜெயித்துள்ளேன். எனக்கு தான் அமைச்சர் பதவி என்று ஒருவர் கூறுகிறார். நான் தான் இருப்பதிேலயே சீனியர். எனக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று ஒரு எம்எல்ஏ பேசுகிறார். தலித் சமூகத்துக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ஒருவர் போர்க்கொடி தூக்குகிறார். இதர சமூக எம்எல்ஏக்களும் இதே போன்று போட்டி போடுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏக்களே குழப்பங்களை ஏற்படுத்துவதை எதிர்க்கட்சியான பாஜ பயன்படுத்தி கொண்டு சித்தராமையா விரைவில் விலகுவார்.

டி.கே.சிவகுமாருக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் என்று அவர்கள் பாணியில் வெடியை கொளுத்தி ேபாடுகிறார்கள். ஆனால் மாநிலம் முழுவதும் 100 காங்கிரஸ் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா குறித்து தான் கட்சி மேலிட தலைவர்களுடன் அவ்வப்போது வந்து ஆலோசித்து செல்கிறேன். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார் என்று டி.கே.சிவகுமார் கூறுகிறார். யார் என்ன பேசினாலும் சித்தராமையா தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது.

கர்நாடக மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி அழைத்து செல்வதே எங்கள் இலக்கு. எனவே தேவையற்ற சர்ச்சை, குழப்பத்துக்கு செவி சாய்த்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று துணை முதல்வரும், காங்கிரஸ் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக கூறினாலும், மாநில தலைவர் பதவியில் இருந்து விரைவில் விலகுவேன். ஆனால் கட்சியில் முதல் வரிசையில் இருப்பேன் என்று சூசமாக தெரிவித்திருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.