பெங்களூரு: கர்நாடக மாநில பேரிடர் கண்காணிப்பு மையம் கூறியதாவது, ‘கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் டிகோடா தாலுகா ஹொன்வாட் பஞ்சாயத்தில் காலை 11.41 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து பசவன பாகேவாடி தாலுகா மங்கோலி கிராம பஞ்சாயத்தில் இரண்டாவது நிலநடுக்கம் சற்று நேரத்தில் உணரப்பட்டது. இரு நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 2.6 ஆக இருந்தது’ என குறிப்பிட்டுள்ளனர். இரு நிலநடுக்கம் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்தனர்.
+