கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு, பியூசி பொதுத்தேர்வில் இனி 33 மார்க் எடுத்தாலே பாஸ்: அமைச்சர் மதுபங்காரப்பா அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடக கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘கர்நாடக மாநில பள்ளி கல்வியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதற்காக சட்ட சபை மற்றும் சட்ட மேலவையில் விவாதிக்கப்பட்டது. மாநில பள்ளி கல்வி தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்பதற்கான ஆலோசனை நடந்தது. சிபிஎஸ்இ மற்றும் வெளி மாநிலங்களில் மாணவர்களின் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த அளவு மதிப்பெண் 33 என உள்ளது. ஆனால், நமது மாநிலத்தில் இது 35 சதவீதமான இருக்கிறது. எனவே, நடப்பு கல்வியாண்டு முதல், தேர்ச்சி அடைவதற்கான மதிப்பெண் 33 என அறிவிக்கப்படுகிறது. தனியாக தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் என ஒட்டுமொத்தமாக எஸ்எஸ்எல்சி மற்றும் பியூசி தேர்வு எழுதும் அனைவருக்கும் இது பொருந்தும் என்றார்.