Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடகா அரசு அதிரடி: திரையரங்குகளில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்..!!

பெங்களூரு: கர்நாடக அரசு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு பேர் கொண்டு ஒரு குடும்பம் மாலுக்கு சென்று திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல வார இறுதி நாட்கள் அதிக டிமாண்ட் இருக்கக்கூடிய நாட்களிலும் டிக்கெட்டுகளின் விலை அதிகமாக இருக்கிறது. சினிமாவிற்கான டிக்கெட் மட்டுமல்லாமல் பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களுக்கான கட்டணம் உள்ளிட்டவையும் சேர்த்து இந்த பொழுதுபோக்குக்கு நாம் அதிக செலவிட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

இந்நிலையில் தான் கர்நாடக மாநில அரசு மிக முக்கியமான ஒரு விஷயத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி திரையரங்குகள் மற்றும் மல்ட்டி பிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட்டுகளின் விலை வரி இல்லாமல் அதிகபட்சமாக ரூ.200ஆக நிர்ணயிக்கப்படும், எனினும் 75 அல்லது அதற்கும் குறைவான இருக்கைகள் கொண்ட பிரீமியம் வசதி கொண்ட திரையரங்குகளுக்கு இந்த விலை கட்டுப்பாடு பொருந்தாது. இந்த வரைவு விதிகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் 15 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த புதிய விதி பொதுமக்களுக்கு திரைப்படம் பார்ப்பதை மேலும் எளிமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.