ஓசூர்: கர்நாடகாவில் இன்று காலை முதல் அம்மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் கர்நாடக ராசு பேருந்துகள் ஓசூர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தை ஒரு நாள் ஒத்திவைக்குமாறும் போக்குவரத்துக்கழக கூட்டுகுழு நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இருந்த நிலையில் கர்நாடக அரசின் ஒரு சில பேருந்துகள் தமிழக எல்லையான ஓசூருக்கு வந்து செல்கின்றன. ஆனால் தமிழக அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் பெங்களூரு செல்கின்றன. காலை நேரம் என்பதால் பயணிகள் மற்றும் வேளைக்கு செல்வோர், கல்லூரி செல்லும் மாணவர்கள் என ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.