Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டரை பா.ஜ.க.வில் சேரும்படி கடத்தி வைத்து மிரட்டியதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு..!!

கர்நாடகா: கர்நாடகாவில் காங்கிரஸ் தொண்டரை பா.ஜ.க.வில் சேரும்படி கடத்தி வைத்து மிரட்டியதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. முனிரத்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை அன்று பெங்களூரு நகரில் சாமுவேல் என்ற காங்கிரஸ் தொண்டரை பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆட்களை வைத்து கடத்தி சென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 2 நாட்கள் பூட்டி வைத்துள்ளார்.

இதன் அடிப்படையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. முனிரத்னா மீது நந்தினி லேஅவுட் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை முனிரத்னாவின் ஆதரவாளர்கள், பாஜக முக்கிய தலைவர்களான சுரேஷ், வசந்த், வாசிம் மற்றும் ஸ்ரீமன் ஆகிய 4 பேர் சாமுவேலை கடத்தி சென்று இரண்டு நாட்கள் பாஜக அலுவலகத்தில் அவரை பூட்டிவைத்தனர்.

சாமுவேல் என்பவர் சுவர்களில் படம் வரைபவர். அவர் குறிப்பாக தேர்தல் சமயத்தில் காங்கிரஸ்காக ஒவ்வொரு தொகுதியாக சென்று சுவர்களில் படம் வரைந்து வருகிறார். அவரை கடத்தி வைத்து பாஜகவில் மட்டும் தான் படம் வரைய வேண்டும் என்று அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனடிப்படையில் முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்து. குற்றவியல் நடவடிக்கை சட்டம் 363 கடத்துதல் மற்றும் 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.