குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்றும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் 18 செ.மீ. மழைகொட்டித் தீர்த்தது.
சுருளோடு 16 செ.மீ., சிற்றார் 1 அணை பகுதியில் 15 செ.மீ. மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி அணையில் 13 செ.மீ., பேச்சிப்பாறையில் 12 செ.மீ., சிற்றார் 2 அணை பகுதியில் 8.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.