கன்னியாகுமரி: கன்னியகுமரின் கடல் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுர் சிலை அருகே கண்ணாடி கூண்டு பாலமானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பலத்தை தினமும் பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இந்த பலத்தில் தற்போது விருசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைத்து கட்டப்பட்டுள்ள இந்த கண்ணாடி தரை பலத்தை இது வரை சுமார் 17 லட்சத்தி 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தாகவும் கண்ணாடி பலம் உறுதியாக உள்ளதாகவும் சிறப்பாக பராமரிக்க பட்டுவருவதாகவும் அறிக்கையில் கூறிள்ளார்.
அது மட்டும் அல்லாமல் கடந்த 16. 08.2025 அன்று பாலத்தை ஒப்பந்தர்கள் மூலம் பராமரிப்பு பணி நடந்த போது ஊழியர் கையில் இருந்த சுத்தியல் விழுந்ததில் கண்ணாடில் சிறிதாக கிறாள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கீறலை சரிசெய்வதற்காக அதை மாற்றக்கூடிய பணிகள் நடைபெற்றுவருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனால் கண்ணாடி கூண்டு பலத்தில் ஏந்த ஒரு பயமும்மின்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்லலாம் எனவும் தேவையற்ற வதந்திகள் பரப்பபடுவதாகவும் மாவட்டாட்சியார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.