கன்னியாகுமரியில் தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு கடிதம் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புவியூர் பகுதியை சேர்ந்த கதிரேஷ் (34) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் பூசாரியாக பணிபுரிந்து வரும் இவர், விநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் சம்மந்தபட்டவர்களை பழிவாங்குவதற்காக அவர்களின் பெயரை பயன்படுத்தி மிரட்டலில் ஈடுபட்டுள்ளார்.