கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.1,000க்கு விற்ற பிச்சி, மல்லிகை பூ முறையே ரூ.500 மற்றும் ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுபமுகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்கள் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.
+
Advertisement 
 
 
 
   