காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை? : தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
டெல்லி : காணும் பொங்கல் தினத்தில் பொது இடங்களில் மக்கள் குப்பை போடுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக மார்ச் 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அறிக்கை அளிக்க தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.