மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த அன்னலட்சுமி (12), அப்பன்திருப்பதி அருகே சுந்தரராஜன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். இவரும், அதே ஊரை சேர்ந்த பிரியாவும் (13), அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக நேற்று சென்றனர். எதிர்பாராவிதமாக இருவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். தகவலறிந்து ஊர் பொதுமக்கள் மற்றும் அப்பன்திருப்பதி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் சிறுமிகள் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Advertisement