Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே 11 மாத பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்ததாக புகார்..!!

திருப்பத்தூர்: கந்திலி அருகே 11 மாத பெண் குழந்தையை பெற்றோர் கொலை செய்திருக்கலாம் என ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் புகார் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயக்கம் ஊராட்சி பத்ரிக்கானூர் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் - முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே அடுத்தடுத்து 3 பெண்குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணி நான்காவது குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர். கஜல்நாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மகப்பேறு சம்மந்தமான சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் தம்பதியினருக்கு 4 ஆவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 11 கால இடைவெளியில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 18ம் தேதி குழந்தை இறந்துள்ளது.

இதை தொடர்ந்து இறந்த குழந்தையின் பெற்றோர் கஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுத்த மருத்துவ சிகிச்சை கோளாறு காரணமாக தன்னுடைய குழந்தை இறந்துவிட்டதாக குற்றசாட்டு வாய்த்த நிலையில், கஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உஷாதேவி ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருந்ததால் 4 வது குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் தலைமையில் பிரேத பரிசோதனை நிபுணர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழு மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் 11 மாத குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். பிரேத பரிசோதனையில் மாதிரிகளை சேகரித்த தடய அறிவியல் ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர்.