Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஞ்சிபுரம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் கண்டோன்மெண்ட் சி.சண்முகம் மறைவு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்பி அஞ்சலி

ஆலந்தூர்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட திமுக முன்னாள் செயலாளரும் ஆலந்தூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான கண்டோன்மெண்ட் சி.சண்முகம் (83) நேற்று முன்தினம் உடல் நலமின்றி காலமானார். இவருக்கு மறைந்த சுந்தரி அம்மாள் என்ற மனைவி, வெற்றிவேல் என்ற மகன் மற்றும் தேன்மொழி, சாந்திகீதா என்ற மகள்கள் உள்ளனர். சி.சண்முகத்தின் உடல் நேற்று பரங்கிமலை பட்ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவரது மறைவு குறித்து அறிந்ததும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சி.சண்முகம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், சண்முகத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து தயாநிதி மாறன் எம்பி, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், ராணிப்பேட்டை காந்தி, திமுக அமைப்பு செயலாளர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, மண்டலக்குழு தலைவர்கள் கே.கே.நகர் தனசேகரன், என்.சந்திரன், என்.ஜோசப் அண்ணாதுரை, ஆலந்தூர் பகுதி செயலாளர் பி.குணாளன், டி.பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் கோல்டு பிரகாஷ், முன்னாள் நகர மன்ற தலைவர் ஆ.துரைவேலு, முன்னாள் திமுக நகர செயலாளர் இரா.மகேந்திரன், சிட்லப்பாக்கம் மனோகரன், வழக்கறிஞர்கள் நாகூர் முத்துமீரான், வாஞ்சிநாதன், சக்திவேல், சதீஷ் மற்றும் கண்டோன் மெண்ட் முத்து, சங்கர், ஆனந்தராஜ், கோவிந்தசாமி, டில்லிபாபு, வி.மனோகர், உள்ளகரம் திவாகர், ஜெ.நடராஜன், செங்கை மோகன், க.ராமு, கோ.பிரவீன்குமார், ராஜவேல், கே.ஜி.ரவிச்சந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் சி.சண்முகம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கண்டோன்மெண்ட் சண்முகம் உடல் நேற்று மாலை அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதம்பாக்கம் என்ஜிஓ சாலையில் உள்ள மின்சார எரிமேடையில் தகனம் செய்யப்பட்டது.