சென்னை: காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காவலராக பணி புரிந்தவர் லோகேஷ் இவருடைய மாமனார் சிவகுமார் என்பவர் அப்பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சிவகுமாருக்கும் பூச்சிவாக்கம் பகுதியை சேர்ந்த முருகன், சிமெண்ட் முருகன் என்பவருக்கும் அப்பகுதியிலேயே கடந்த மாதம் முன்தாகராறு ஏற்பட்டது. இதில் வழக்குப்பதிவு வாலாஜா காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்ககோரியும், புகார் அளித்து 1 மாத காலம் ஆகியும் காவல்துறை தரப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி. இந்த வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காஞ்சிபுரம் டி.எஸ்.பி. வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் கட்டியதாக கூறி நீதிபதி செம்மல் டி.எஸ்.பி. சங்கரை உடனடியாக கைது செய்து நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டிருந்தார். குறிப்பாக நீதிமன்ற வளாகத்திலும், காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிங்கர் கே.டி முகிலன் குறையிட்டார். இது முன்விரோதம் காரணமாக, ஏற்கனவே ஏற்பட்ட தகராறு காரணமாக நடைபெற்ற சம்பவம்.
குறிப்பாக இது தனிப்பட்ட பிரச்சனை என்றும் மாவட்ட நீதிபதிக்கு எதிராக pso புகார் அளித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதால் இந்த கைது ரத்து செய்யப்பட வேண்டியது என்றும் வாதம் வைக்கப்பட்டது . இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்கிறேன் மதியம் பட்டியலிடுகிறேன் என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று மதியம் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் சட்டவிரோதமாக அதிகாரத்தையும் மீறி செயல்பட்டிருக்கிறார், சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் என்றும் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. லோகேஷ் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி டி.எஸ்.பி சங்கர் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அந்த உத்தரவை ரத்து செய்து விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்.