Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொடர் மழை காரணமாக காஞ்சி, செங்கை மாவட்டங்களில் 112 ஏரிகள் நிரம்பியது

காஞ்சிபுரம்: தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 112 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவா குட்டை தெரு, லிங்கப்பன் தெரு, முருகன் காலனி, பல்லவர்மேடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் 381 ஏரிகளில், தாமல் மதகுஏரி, தாமல் சக்கரவர்த்தி தாங்கல் ஏரி, தைப்பாக்கம் ஏரி, கூரம் சித்தேரி, கோவிந்தவாடி சித்தேரி, திருப்புக்குழி ஏரி, திருப்புலிவனம் ஏரி, இளநகர் ஏரி, அனுமன்தண்டலம் ஏரி, சிருங்கோழி ஏரி, காவனூர் புதுச்சேரி ஏரி, மருத்துவம்பாடி ஏரி, கோவிந்தவாடி பெரிய ஏரி ஆகிய 60 சிறிய ஏரிகளும், பெரிய ஏரிகளான தாமல், உத்திரமேரூர் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இதில் 60 ஏரிகள் 75 சதவீதமும், 137 ஏரிகள் 50 சதவீதமும், 119 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. தென்னேரி மூலம் 5,858 ஏக்கர் விவசாய நிலத்துக்கு நீர்பாசமும், உத்திரமேரூர் ஏரியில் இருந்து 5,636 ஏக்கர் நீர்பாசனமும், பெரும்புதூர் ஏரியில் இருந்து 1423 ஏக்கர் நீர்பாசனமும், பிள்ளைப்பாக்கம் ஏரியில் இருந்து 121.84 ஏக்கர் நீர்பாசனமும், மணிமங்கலம் ஏரியில் இருந்து 2,079 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்பாசனம் செய்யப்படுகிறது. இந்த ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. உத்திரமேரூர் ஒன்றியத்தில் 129 ஏரிகளில் 2 ஏரிகள் நிரம்பியுள்ளன. குன்றத்தூர் ஒன்றியத்தில் 58 ஏரிகளில் ஒரு ஏரியும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 55 ஏரிகளில் ஒரு ஏரியும் நிரம்பியுள்ளன.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 528 ஏரிகளில் 22 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

150 ஏரிகள் 75 சதவீதமும், 150 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளது. மாவட்டத்தில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொன்விளைந்தகளத்தூர், மானாம்பதி, கொண்டங்கி, காயார், கொளவாய் ஏரி, நந்திரவரம் கூடுவாஞ்சேரி ஏரி, படப்பை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலூர் ஏரி 10 சதவீதம் மட்டுமே நிரம்பியுள்ளது. ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 900 ஏரிகளில் 300 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பழையசீவரம், ஈசூர், வாயலூர் தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.