கமுதி அருகே குருபூஜை பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த பெண் தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
ராமநாதபுரம்: கமுதி அருகே குருபூஜை பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த பெண் தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த கலைவாணி (41), நேற்றிரவு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பிரேதப் பரிசோதனைக்கு அவரின் உடலை அனுப்பி வைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.
