கமுதி : கமுதி அருகே கே.வேப்பங்குளம் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 1,600 கிலோ மீன் சிக்கியது.கமுதி அருகே கே.வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நேற்று நடைபெற்றது. கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மீன் பிடிவலை, துணி, பிளாஸ்டிக் வாளிகளால் மீன்களை பிடித்தனர்.
வலையில் பெரிய மற்றும் சிறிய அளவிலான கெண்டை மீன்கள் 1,600 கிலோ சிக்கியது. மீன்கள் அனைத்தும் கூறு வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள மீன்களை கமுதி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.