Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்: வீடு, அரசு வேலை, உதவித் தொகை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் கடந்த மாதம் 14ம்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி வசந்தி 2017ம் ஆண்டே உடல்நலக் குறைவால் காலமானார். இந்த தம்பதிக்கு 3 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். பெற்றோரை இழந்து தவிக்கும் 4 குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் அந்த நான்கு குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும். சொன்னபடியே, தம்பதியின் மகள் லாவண்யாவிற்கு ரூ.2.50 லட்சம் வீட்டுமனை பட்டா ரூ.3,55,660 மதிப்பீட்டில் கலைஞர் கனவு இல்லம் வழங்க ஆணை. சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கணினி உதவியாளர் பணி நியமன ஆணை. ரிஷிகா மற்றும் அபினேஷிற்கு - அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் மாதம் தலா ரூ.2000 உதவித்தொகை. ரீணாவிற்கு - திறன் அழகு கலை பயிற்சி பெறுவதற்காக ரூ.6000 ஆகியவற்றை வழங்கினேன். நாளை எனும் நம்பிக்கையை பற்றிக்கொண்டு வாழ்வில் அவர்கள் உயர்ந்திட தாயும் தந்தையுமாய் என்றும் இருக்கும் நமது திராவிட மாடல் அரசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.