சென்னை: கலைஞரின் பிள்ளையாகவே வளர்ந்தார் முரசொலி செல்வம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறிள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகன் முரசொலி செல்வம், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக அரை நூற்றாண்டுக்கும் மேலாக பணியாற்றியவர். அவர் தனது 84 வயதில், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மறைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கலைஞரின் பிள்ளையாகவே வளர்ந்தார். முரசொலியில் எங்களுக்கெல்லாம் ஆசானாகத் திகழ்ந்தார். இயக்கத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்து மறைந்தார். அச்சமில்லை, ஆணவமில்லை, நல்லறிவினில் எம் திராவிடச் செல்வத்துக்கு இங்கு எவரும் நிகரில்லை என நான் உற்ற துணையாகக் கொண்ட முரசொலி செல்வத்தின் முதலாம் நினைவு நாள். அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி போற்றி வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
+
Advertisement