Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றங்களையெல்லாம் பட்டியலிட்டு - அதன் வரலாற்றைச் சொன்னால், தலைவர் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும். ஆறாத வடுவென - ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து ஆண்டுகள் ஆகிவிட்டது ஆறு. இந்நாளில் அண்ணனின் அருகில் அவர் ஓய்வுகொண்டிருக்கும் கடற்கரைக்கு உடன்பிறப்புகள் சென்று, “அவர் காட்டிய வழிதனில் - அவர் கட்டிய படை பீடுநடை போடும்; தமிழும் தமிழ்நாடும் அவனிதனில் உயர்ந்து விளங்கப் பாடுபடும்!” என உறுதியெடுத்து உரமூட்டிக் கொண்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.