டெல்லி: நவம்பர் 3ஆம் தேதி சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சிறுவர்களின் சமூக வலைதள பயன்பாடு உலகளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இந்தியாவில் 18வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க கோரியை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் சமூகவலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி. இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க முயற்சித்த போது நேர்ந்த எதிர்ப்பை சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
