பழநி: வருடாந்திர பராமரிப்பு பணிக்காக பழநி கோயில் ரோப்கார் வரும் ஜூலை 15ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்காரும், மேற்கு கிரிவீதியில் இருந்து வின்ச் இயக்கப்படுகிறது. இதில் ரோப்காரின் பயண நேரம் 3 நிமிடம். ஒரு மணிநேரத்தில் சுமார் 450 பேர் பயணிக்கலாம். இந்த ரோப்காரில் வரும் ஜூலை 15ம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணி துவங்க உள்ளது. ரோப்கார் கயிறுவடம் மாற்றம், ஷாஃப்ட் சீரமைப்பு, பெட்டிகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மொத்தம் 31 நாட்கள் வரை நடைபெற உள்ளன. பணிகள் நிறைவடைந்து, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்கு பின் பக்தர்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் ரோப்கார் கொண்டு வரப்படுமென கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement