டெல்லி: இந்திய நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் மிக குறைவாக உள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற உச்சநீதிமன்ற நியமனங்களில் பெண் நீதிபதிகள் யாரும் பதவி உயர்வு பெறவில்லை. நீதித்துறை நியமனங்களில் பெண்களின் விகிதாசார பிரதிநிதித்துவத்தை கொலீஜியம் உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement