சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து பணியிடம் மற்றம் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விடுப்பில் இருக்கும் நீதிபதி நிஷா பானு வரும் 20ஆம் தேதிக்குள் கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிஷா பானுவை பணியிட மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய சட்ட அமைச்சகம் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி கேரளா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி நிஷா பானு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், கேரளா உயர்நீதிமன்றத்தில் இதுவரை நிஷா பானு பத்தி ஏற்காமல் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியில் இருந்து நீதித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் விடுப்பில் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், கொலீஜியத்துடன் ஆலோசனை நடத்திய பின் குடியரசுத்தலைவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 20ஆம் தேதிக்குள் கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


