பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை: பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தி வயர் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், மூத்த பத்திரிகையாளர் கரண் தாபருக்கு அசாம் போலீஸ் சம்மன் அனுப்பியது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்த கட்டுரைக்காக தேசத்துரோக குற்றச்சாட்டில் 2 பேர் மீதும் அசாம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போலீசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் இருவருக்கும் பாதுகாப்பு அளித்த நிலையில் சம்மன் அனுப்பியது கண்டிக்கத்தக்கது. வழக்கு விவரம் எதுவும் சம்மனில் இணைக்கப்படாதது, கைது செய்யப்படும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலியாக பிஎன்ஸ் 152வது பிரிவு தவறாக பயன்படுத்தபப்டுகிறது. பிஎன்ஸ் 152வது பிரிவை தவறாக பயன்படுத்தி ஊடக சுதந்திரம் நசுக்கப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகம் என்றால் ஜனநாயகம் நிலைத்து நிற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.