ஜியோ பயனாளர்கள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு
மும்பை: ஜியோ பயனாளர்கள் ஜெமினி ஏஐ ப்ரோ சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஜியோ நிறுவனம் மலிவான விலையில் மொபைல் டேட்டா வழங்கி வருகிறது. அதே போன்ற அனுபவத்தை ஏஐ சேவையில் பயனாளிகளுக்கு வரும் நோக்கில் கூகுள் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு புது திட்டத்தில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி அனைவருக்கும் ஏஐ என்ற முழக்கத்தை முன்வைத்தார். அதன்படி ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள் ரூ.35,100 மதிப்புள்ள gemini AI Pro சேவையை 18 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். இதில் வரம்பற்ற Chats, 2TB Cloud Storage, வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்க முடியும். முதற்கட்டமாக 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் இந்த சேவையை தற்போது பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஜியோ பயனாளர்களுக்கு இச்சேவையை பெற வழிவகை செய்யப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
  
  
  
   
