புதுடெல்லி: ஜார்க்கண்டின் கோடர்மா மற்றும் கிரிதி இடையே முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்ட சரக்கு ரயில் கடந்த 31ம் தேதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் சரக்கு ரயிலில் பாதுகாவலர்கள் பணியில் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று அகில இந்திய ரயில்வே கார்டு கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. சரக்கு ரயிலின் பணியாளர்களுக்கு உதவுவதற்கோ அல்லது வழிநடத்தவோ மற்றும் சரக்கு ரயிலின் பின்புறத்தை பாதுகாப்பதற்கோ ஒரு கார்டு(ரயில் மேலாளர்) இல்லாததால் தான் ரயில் தடம் புரண்டதாக கவுன்சில் தெரிவித்துள்ளது.
ரயில்வேயில் 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 27.28 சதவீதம் அதாவது 15,520 பணியிடங்கள் காலியாக உள்ளது. ரயில்வே கார்டு இல்லாமல் ரயில்களை இயக்குவது பாதுகாப்பான நடைமுறை இல்லை அனைத்து காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.