குழித்துறை அருகே தனியாக வசித்த பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை: பிரபல கொள்ளையன், மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு
மார்த்தாண்டம்: குழித்துறை அருகே தனியாக வசித்த பெண் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பிரபல கொள்ளையன், அவரது மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் நாடார். இவரது மகள் ஜெகதீஷ்குமாரி என்ற டாடா (50). திருமணம் ஆகவில்லை. இவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. இவர்கள் வசதியான பாரம்பரிய அமைக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. தற்போது ஜெதீஷ்குமார் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிக நகைகள் உள்ளது என அப்பகுதியில் உள்ள மக்களுக்கு தெரியும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை அறிந்த மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து அங்கு வைக்கபட்டிருற்த பிரோவை உடைத்ததுடன் அதில் இருந்த 90 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். கொள்ளை நடந்து சில தினங்கள் கழிந்த பின்னரே ஜெகதீஷ் குமாரிக்கு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, ஏற்கனவே பல குற்றங்களில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவனை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் காஞ்சாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரணையில் ஜெகதீஷ்குமாரி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டதோடு, அவர் வீட்டில் நகை இருப்பதை உறுதி செய்து கொண்டு கொள்ளையன் வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் பல நாட்களாக நகை கொள்ளை குறித்து புகார் கொடுக்காததை அடுத்து கொள்ளையன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள பிரபல நகைகடைகளில் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது. மேலும் போலீசார் பிடிபட்ட குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு நகைகளை கைப்பற்றும் பணியிலும் கொள்ளையர்களை கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நகை கொள்ளை சம்பவம் களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.