Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகைக்கடை உரிமையாளரிடம் நகைகள் மற்றும் பணம் என சுமார் ரூ.10.89 கோடி பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்த 3 நபர்கள் கைது

சென்னை: சென்னை, வானகரத்தில் Boya Gan Jewelers என்ற பெயரில் நகைகடை நடத்தி வரும் ஸ்ரீதேவி பெ/வ 50, க/பெ சதீஷ்குமார் ரெட்டி என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் 11.06.2025 அன்று கொடுத்த புகாரில் சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் சுனிதா பிரகாஷ், அவரது கணவர் பிராகஷ் மற்றும் அனிதா ஸ்ரீதர், சஞ்சய் சோலங்கி ஆகியோர் அறிமுகமாகி கடந்த 2022.ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 06.12.2024ம் தேதி வரை ன் அடிப்படையில் ரூ.5.13 கோடி மதிப்புள்ள சுமார் 9.5 கிலோ தங்க நகைகளும், ரூ. 130 கோடி மதிப்புள்ள வைர நகைகளை பெற்றும் கொண்டும், மேலும் அவர்களிடம் முதலீடாக செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு பைம் தருவதாக பெற்ற ரூ.4.45 கோடி பணத்தையோ, நகைகளைவோ திருப்பிக் கொடுக்காமல் மொத்தம் சுமார் ரூ.10.89 கோடி ஏமாற்றியதாவும், மேலும் அவர்களிடம் பாணத்தை திரும்ப கேட்ட போது சிவகுருநாதன் என்பவர் தன்னை மிரட்டியதாகவும், தன்னை பெண் என்றும் பாராமல் பிரகாஷ் மற்றும் சிவகுருநாதன் ஆகியோர் அவதூறான வார்த்தைகளால் திட்டி துன்புறுத்தியதாகவும் மேலும் போலி வரைவோலையை காண்பித்து தன்னை ரூ.10.89 கோடி வரை ஏமாற்றியதாகவும், எனவே மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார். மேற்படி புகார் மீது சென்னை, மத்திய குற்றப்பிரிவு EDF-2 உதவி ஆணையாளர் Sபெனாசிர் பாத்திமா வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

போலீசாரின் விசாரணையில் மேற்படி நபர்கள் வாதி ஸ்ரீதேவி என்பவரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடமிருந்து நகைகளை பெற்றுக் கொண்டு அதற்குண்டான பணத்தை திரும்ப கொடுக்காமல் வழக்கறிஞர் சிவகுகுநாதன் என்பவர் மூலம் மிரட்டியது தெரியவந்தது. மேலும் சிவகுருநாதன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் Å.ராதிகா, அறிவுறுத்தலின் பேரில் உதவி ஆணையாளர் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு EDF-2 காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து எதிரிகள் 1. சுனிதா பிரகாஷ், வ/43, அண்ணாநகர், சென்னை 2.பிரகாஷ், ஆ/வ43, அண்ணாநகர்,சென்னை ஆகிய இருவரை அண்ணாநகரிலும், 3.சிவகுருநாதன்,ஆ/வ47, திருவான்மியூர், சென்னை என்பவரை திருவான்மியூரில் வைத்து கடந்த 13.09.2025 ம் தேதி கைது செய்தனர். மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட எதிரிகள் மூவரும் 13.09.2025 அன்று எழும்பூர் CCB & CBCID நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.