Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் 2வது முறையாக 40 சவரன் நகைக் கொள்ளை: 2023ல் 150 சவரன் திருடப்பட்ட நிலையில் மீண்டும் கைவரிசை

ஈரோடு: ஈரோட்டை சேர்ந்த ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பழையபாளையம் அருகே கணபதி நகர் 4வது வீதியில் இந்த சம்பவமானது நடந்து இருக்கிறது. ஆடிட்டராக இருக்கக்கூடிய துரைசாமி கடந்த ஆண்டு உயிரிழந்திருக்க கூடிய நிலையில், அவரது மனைவி சுப்புலட்சுமி ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார். இவர்களது ஒரே மகள் பல் டாக்டர் அவர் ஆஸ்திரேலியாவில் திருமணமாகி அங்கு வசித்து வருகிறார்.

சுப்புலட்சுமி வழங்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு நேற்று இரவு உறங்க சென்றியிருக்கிறார். வீட்டின் கீழ் தளத்தில் ஒரு அரையில் உறங்கி கொண்டிருந்த போது மர்மநபர்கள் இவரோடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளேபோகுந்து மாடியில் இருந்த அரையில் பீரோவை உடைத்து வீட்டின் இருந்த 40 சவரன் நகை மற்றும் ரூ.7 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை திருடி சென்றிருக்கிறார்கள். காலையில் சுப்புலட்சுமி எழுந்து பார்த்தபோது பீரோ திறந்து கிடைப்பதும், நகைகள் மாயம் ஆகியிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதை குறித்து அவர் குடுத்த புகாரின் பெயரில் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அங்கு பதிவாகி இருக்கக்கூடிய கை ரேகைகைகளை ஆய்வு செய்து தடையங்கள் சேகரித்து வருகிறார்கள். மோப்ப நாயும் வரவைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆடிட்டர் வீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியிருப்பது இப்பகுதியில் பரப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.