ஜீப் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதராக ஹிருதிக் ரோஷன் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் இந்த நிறுவனத்தின் ஜீப் ராங்ளர் டாப் வேரியண்டை அறிமுகம் செய்து புதிய விளம்பரத்தில் நடித்துள்ளார். ‘தி ஒன் அண்ட் ஒன்லி’ என்ற பெயரிலான இந்த விளம்பரம் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜீப் ரூபிகான் வேரியண்ட் இடம் பெற்றுள்ளது. இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 268 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கொரில்லா விண்ட் ஷீல்ட், அடாஸ் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.71.65 லட்சம்.
+
Advertisement